For the Kind attention of Sri Vaishnavas worldwide இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நேற்று என் பையனுக்கு 5ஆம் வகுப்புக் கணக்கு சொல்லிக்கொடுக்க முயற்சித்தேன். ஆனால் சில கணக்குகளை என்னால் போட முடியவில்லை (HCF , LCM ),இத்தனைக்கும் நான் B.E. படிக்கும்போது பல கஷ்டமான கணக்குகளை (உதாரணத்திற்கு) Laplace Transformation, Fourier transformations ,Integral calculus போன்றவற்றை வெகு சுலபமாகப் போட்டிருக்கிறேன் .பலருக்குச் சொல்லியும் கொடுத்திருக்கிறேன் ,இது ஏன் என்றே எனக்குப்புரியவில்லை .
Personal இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
எங்கள் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறுவனத்திற்கு தினமும் பல பேர் பல புஸ்தகங்களைக் குறித்து போன் செய்வார்கள் .அதில் சிலர் ” ஸ்வாமி இருக்கிறார்களா” என்று கேட்பர் . “ஸ்வாமி” என்று அவர்கள் குறிப்பிடுவது என் தந்தை க்ருஷ்ணமாசாரி அவர்களை நாங்களும் அவர்கள் ஏதோ ஸம்ப்ரதாய விஷயத்தைப் பற்றி ஸ்வாமியிடம் நேரடியாக பேச விரும்புகிறார்கள் போலிருக்கிறது என் போனை ஸ்வாமியிடம் கொடுத்தால் அவர்கள் சொல்வார்கள் , ” எனக்கு ஸ்ரீஸ்தவம் வேணும் அல்லது நாலாயிர திவ்யப்ரபந்தம் புஸ்தகம் வேண்டும் ,அதன் விலை என்ன , அதை சென்னைக்குக் கொரியரில் அனுப்ப எவ்வளவு செலவாகும் . சில சமயம் அவர் ஊரில் இல்லாத போது, ” அவர் ஊரில் இல்லையே, உங்க்களுக்கு என்ன வேண்டும் என நாங்கள் கேட்ட பிறகு அவர்கள் சொல்வார்கள் , ” எனக்கு ஸ்ரீஸ்தவம் வேணும் அல்லது நாலாயிர திவ்யப்ரபந்தம் புஸ்தகம் வேண்டும் ,அதன் விலை என்ன , அதை சென்னைக்குக் கொரியரில் அனுப்ப எவ்வளவு செலவாகும் .இதை எங்களிடமே நேரடியாகக் கேட்டிருக்கலாம் ,இது போன்ற என்கொயரிகளுக்கு பதில் சொல்வதற்காகவே ஒரு staffஐ நாங்களே வேலைக்கு வைத்திருக்கிறோம் யில். இதற்கு அ ந்த staffஏ பதில் சொல்லியிருப்பார் , இதற்கு ஸ்வாமிதான் பதில் சொல்ல வேண்டும என்ற அவசியமில்லை இப்படியாகத் தங்களது தேவையைப் பற்றி நேரடியாக போனில் சொல்ல மாட்டார்கள்.அதை விட்டு விட்டு வேறு எதை எதையோ பற்றி பல நிமிடங்கள் பேசி விட்டுப் பிறகு தான் தேவையான விஷயத்திற்கே வருவர். இன்னும் சில பேர் சில தேவையில்லாத தகவல்களை தாங்களாகவே முன் வ ந்து தருவார்கள் .எங்க அத்தையோட தங்கை யாத்துக்காரரோட ஷட்டகர் தான் அங்க அடிக்கடி வந்து புக் வாங்குவார் அல்லது உங்காத்துக்கு நாலாம் தள்ளிதான் என் மச்சினியோட நாத்தனாரோட மாமியார் குடியிருந்தா , நான் சொல்றது 25 வருஷத்துக்கு முன்னாடி , இப்ப அவாள்ளாம் கனடாவில் செட்டிலாயிட்டா ,இந்த ரீதியில் தங்களைப் பற்றிய சில செய்திகளை அப்போதைய அவர்களுடைய தேவையான புஸ்தகம் வாங்குவதற்குத் துளியும் சம்பந்தமில்லாமல் சிலர் பேசுவார்கள் .இப்படிச் சில பேருக்கு பிறருடைய நேரத்தின் அருமையே தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் தான் இங்கே எழுதியுள்ளேன் .இவர்களைப் போன்றவர்களால் பல போன் கம்பெனிகளுக்கு நல்ல லாபம் .
Personal இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நேற்று நான் என் உறவினர் ஒருவர் வீட்டிற்குத் துக்கம் கேட்பதற்காக கோயிலூர் சென்றிருந்தேன் .அது ஒரு சிறிய க்ராமமாதலால் அங்கே செல்வதற்குக் குறிப்பிட்ட நேரத்தில் போனால்தான் பேருந்தைப் பிடிக்க முடியும் . நான் ஒரத்தனாட்டில் இறங்கும் போது காலை மணி 11.பேருந்து நிலையத்தில் ஒரு கடைக்காரரிடம் கோயிலூர் போக பஸ் எப்போது வருமெனக் கேட்டதற்கு அவர் மதியம் 3 மணிக்குத்தான் பஸ் வரும் என ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார். நம்பளால 3 மணி வரைக்கும் காத்திருக்க முடியாது என்றெண்ணி , பேசாமல் ஒரு ஆட்டோவில் 50 ரூபாய் கொடுத்துக் கோயிலூர் போய்விடலாம் என்றெண்ணி ஏதாவது ஆட்டோ தென்படுகிறதா எனச் சுற்றும் முற்றும் பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மார்க்கத்தில் இருக்கும் ஒரு சுமாரான பெரிய ஊரான ஒரத்த நாட்டில் ஒரு ஆட்டோ கூட இல்லை என்ற விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது .பிறகு விசாரித்த பின் அங்குள்ள டேக்சி உரிமையாளர்கள் தங்களுக்குச் சவாரி போய்விடும் என்ற பயத்தில் அங்கே எந்த ஆட்டோவையும் ஒட அனுமதிப்பதில்லை என்ற உண்மை தெரிய வந்தது. பாவம் ஒரத்த நாட்டு மக்கள்.
General இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
தமிழகத்தை ஆளும் அராஜக அக்கிரமக்கார ஆணவம் மிக்க அசுர திமுக அரசு அறிவித்திரு ந்த பந்தை சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துவிட்டது .இருப்பினும் எந்த பஸ்ஸும் ட்ரெய்னும் இன்று ஓடவில்லை . ஆட்சியும் அதிகாரமும் தங்கள் கையில் தான் உள்ளது என்ற ஆணவத்தில் பொது மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சுப்ரீம் கோர்டின் தீர்ப்பையே அவமதித்திருக்கிறது இந்த ஆணவமிக்க சர்வாதிகாரி திமுக அரசு .இது கடவுளுக்குச் சமமாக மதிக்கப்படும் மாண்புமிகு நீதிபதிகளின் முகத்தில கரியைப் பூசியதற்குச் சமம் . சுப்ரீம் கோர்ட் இதற்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும். மக்கள் தான் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் விழித்துக்கொள்ள வேண்டும்
Everybody's Concern இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
தமிழகத்தை ஆளும் அராஜக அக்ரமக்கார அசுர திமுக அரசு நடத்தவிரு ந்த ப ந்தை சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துவிட்டது .இந்தியாவில் நீதி இன்னும் சாகவில்லை .ஒரு நூலிழையில் அது இன்னும் எங்கோ ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது ,சுப்ரீம் கோர்டுக்கு ஒரு ஜே போடலாமே
Everybody's Concern இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
டிக்கெட் காணாமல் போனதால் என் தந்தை 20,27,29 (ஆமாம் இன்றுதான்) ரயிலை விடவேண்டிய சூழ் நிலை .யாரோ ஒரு புண்ணியவான்/புண்ணியவதி ரயில் டிக்கெட்டை சென்னை , கிண்டியிலிருந்து இன்று போஸ்ட் செய்திருந்தார்கள்.அவருக்கு என் உளமார்ந்த நன்றி .அந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு முதலில் நான் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் சென்றேன் .அவர்கள் நாட்கள் பல கடந்துவிட்டதால் என்னைத் திருச்சிக்குப் போகச் சொன்னார்கள் . நானும் கிடைத்தவரைக்கும் லாபம் எனத் திருச்சி ரயில் நிலையம் சென்றேன் .அங்கே ஒரு மேடம் டிக்கெட்டுகளைப் பார்த்துவிட்டு Claims Departmentக்குப் போகச் சொன்னார்கள் .அங்கே போன பின்னர்தான், இன்று சனிக்கிழமை ,அதனால் விடுமுறை எனத் தெரிந்தது .உடனே என் நண்பர் ரயில்வே ஸ்ரீதருக்கு போன் செய்தேன் .அவர் என்னை உடனே Railway station first Platformல் இருக்கும் Chief ticketing Inspectorஇடம் Journey not performed என்னும் formஐ வாங்கிக்கொள்ளச் சொன்னார் .அவர் சொன்னபடியே செய்தேன் .இந்த formஐ ஒரு கவரிங் லெட்டருடன் Claims Departmentல் திங்கட்கிழமை கொண்டுபோய் கொடுக்கவேண்டும்.தக்க சமயத்தில் என் நண்பர் ஸ்ரீதர் கொடுத்த ஆலோசனையால் பாதி வேலை இன்றே முடிந்தது .
தொடரும் ……………………………
Unbelievable stuff இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திரு.பராசரன் என்பவர் இந்திய அரசாங்கத்தின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாகப் பணி புரிந்து வருகிறார் .திரு.கோபாலன் என்பவர் தமிழ்நாடு அரசின் நீதித்துறையில் ஏதோ ஒரு பெரிய பதவியை வகிக்கிறார் ..இருவரும் பிறப்பால் ஸ்ரீவைஷ்ணவர்கள்.பராசரன் அஹோபில மடத்து சிஷ்யர்,VT கோபாலன் கோயிலண்ணன் சிஷ்யர்.பராசரன் சுப்ரீம் கோர்டில் கீழ்த்தட்டு மக்களுக்காக வாதாடியவர்,காலங்காலமாக மேல்தட்டு மக்கள் கீழ்த்தட்டு மக்களை ஒடுக்கிவைத்தனராம்.எனவே பேக்வர்ட் க்ளாசுக்கு இட ஒதுக்கீடு அவசியமாம் .இவர் forward communityயா backward communityயா . VT கோபாலன் ராமர் பாலம் இல்லையென்றவர் ,ஏன் ராமர் என்ற ஒருவரே இல்லை என வாதாடியவர் .இவர்கள் பிறப்பால் மட்டுமே அய்யங்கார்கள் ,இவர்கள் இப்படியெல்லாம் நீதிமன்றத்தில் பேசிவிட்டு தத்தம் ஆசார்யர்களைப் பாத பூஜை செய்தால் போதும் இவர்களுக்குப் பாவ மன்னிப்பு கிடைத்துவிடும்.அஹோபில மடம் ஆகட்டும் அண்ணன் திருமாளிகை ஆகட்டும், அவர்களுக்கு வேண்டியது பணம்,பணம் ,அதுவும் ஆயிரங்களோ , லட்சங்களோ அல்ல , கோடிகள் , அது எந்தப்பாவச் செயலின் விளைவாக வந்தது என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.இப்போதெல்லாம் சன்னியாசிகளுக்குத்தான் பணத்தேவை மிக அதிகமாக இருக்கிறது.தங்கள் செயலால் மேற்சொன்ன இருவருமே சண்டாளர்கள் தான்,ஆம் இவர்களை இதை விட மோசமாகத்தான வர்ணிக்க வேண்டும் , நாகரீகம் கருதி இதற்கு மேலும் கொச்சைப்படுத்த விரும்பவில்லை
For the Kind attention of Sri Vaishnavas worldwide இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
It is ironic that the ruling demons of tamilnadu have called for a statewide bandh on Mon ,Oct 1 to protest against the people to hasten the SSCProject against the wishes of Lakhs of followers of the Hindu faith who believe that the SSCP would damage the Great Raama Sethu , the bridge built by Lord Raama .All this not for the sake of the public but only for filling their already overflowing coffers .When will this anti people regime come to an end .God save tamilnadu and India from the clutches of these modern demonic avathaars who are worse than HiraNyakasipus and HiraNyaakshaas
Everybody's Concern இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமியைப் பற்றிய கருத்தரங்கம் ஒன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இதற்குச் செல்வதற்காக ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ க்ருஷ்ணமாச்சாரி (அன ந்தாசார்யரின் புதல்வர்) 10 நாட்கள் முன்னதாகவே ரயில் டிக்கெட் எடுத்து வைத்திருந்தார் .Madras Universityல் சென்ற வாரம் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன .இவற்றை வங்க்குவதற்காக என் தந்தை 12G பேருந்தில் பீச்சுக்குப் பயணமானார் .யாரோ ஒருவன் இவரை நன்கு நோட்டமிட்டிருப்பான் போலும்.இவர் கையில் வத்திருந்த கைப்பையை வெட்டி அதிலிருந்து 4000 ரூபாய் பணம் , Railway Senior Citizen Identity proofக்கான Passport , ICICI ATM card மற்றும் மெற்சொன்ன ரயில் டிக்கெட் ஆகிய அனைத்தையும் லபக்கிக்கொண்டு போய்விட்டான் .எப்படியோ ஸ்ரீரங்கம் திரும்பிய அவர் மீண்டும் இ ந்த விழாவிற்குச் செல்வதற்காக E-ticket மூலம் சென்னைக்கு டிக்கெட் புக் செய்தார் , இ ந்த முறை Identity proofக்கான அத்தாட்சியாக தன்னுடைய PAN numberஐ கொடுத்தார்.டிக்கெட்டை ப்ரின்ட் அவுட் எடுத்த பிறகு தான் எங்களுக்கு PAN கார்டும் காணாமல் போனது தெரியவந்தது . என் தந்தை இந்த முறை சென்னைக்குப்போகாமலிருப்பதற்காகவே இப்படியெல்லாம் நடக்கிறதோ என்னவோ .இதெல்லாம் போதாதென்று என் தம்பி பையன் ஸ்ரீஷா (வயது 1.5)2 நாட்களுக்கு முன் தன் தாயின் இடுப்பிலிருந்து குதித்துக் கீழே விழு ந்துவிட்டான் .எனவே என் தந்தை சென்னைக்குப் பதில் பெங்களூருக்குப் பயணமானார்
Personal இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »




