நேற்று தான் என் தந்தையார் தொலைத்த 4000 ரூபாய் பணத்தைப் பற்றியும் காணாமல் போன பாஸ்போர்ட்டைப் பற்றியும் நான் எழுதியிருந்தேன்.இன்று காலை எங்கள் ஸ்ரீரங்கத்து வீட்டு விலாசத்திற்கு ஒரு பதிவுத் தபால் என் தாத்தா பெயருக்கு ( Addressed to Ananthachari) வந்தது .எனக்கு ஒரே ஆச்சர்யம்.செத்துப்போன நம்ம தாத்தா பெயரைத் தவறுதலாக யாரோ எழுதியிருக்கிறார்களே என நினைத்துக்கொண்டே கவரைப்பிரித்தால் உள்ளே காணாமல் போன பாஸ்போர்ட் , வங்கி அட்டை மற்றும் ரயில் டிக்கெட்டுகள் இரு ந்தன.யாரோ ஒரு புண்ணியவான்/புண்ணியவதி இவற்றை சென்னை , கிண்டியிலிருந்து போஸ்ட் செய்திருக்கிறார்கள் ,அவருக்கு என் உளமார்ந்த நன்றி .அ ந்தக் கவரில் Sender name or address இல்லை .ஒரு லெட்டரில் Asst.Postmaster Guindy ,letter with passport and tickets of Ananthachari enclosed என்ற வாசகங்கள் காணப்படுகின்றன.அந்த தபால் நிலைய அதிகாரிக்கும் என் நன்றி .பாஸ்போர்ட்டில் என் தந்தையின் பெயர் Ananthachari Krishnamachari எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர் அனந்தாசாரி என்ற பெயருக்கு கவரை அனுப்பியுள்ளார் என நான் புரிந்துகொண்டேன்


