அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமியைப் பற்றிய கருத்தரங்கம் ஒன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இதற்குச் செல்வதற்காக ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ க்ருஷ்ணமாச்சாரி (அன ந்தாசார்யரின் புதல்வர்) 10 நாட்கள் முன்னதாகவே ரயில் டிக்கெட் எடுத்து வைத்திருந்தார் .Madras Universityல் சென்ற வாரம் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன .இவற்றை வங்க்குவதற்காக என் தந்தை 12G பேருந்தில் பீச்சுக்குப் பயணமானார் .யாரோ ஒருவன் இவரை நன்கு நோட்டமிட்டிருப்பான் போலும்.இவர் கையில் வத்திருந்த கைப்பையை வெட்டி அதிலிருந்து 4000 ரூபாய் பணம் , Railway Senior Citizen Identity proofக்கான Passport , ICICI ATM card மற்றும் மெற்சொன்ன ரயில் டிக்கெட் ஆகிய அனைத்தையும் லபக்கிக்கொண்டு போய்விட்டான் .எப்படியோ ஸ்ரீரங்கம் திரும்பிய அவர் மீண்டும் இ ந்த விழாவிற்குச் செல்வதற்காக E-ticket மூலம் சென்னைக்கு டிக்கெட் புக் செய்தார் , இ ந்த முறை Identity proofக்கான அத்தாட்சியாக தன்னுடைய PAN numberஐ கொடுத்தார்.டிக்கெட்டை ப்ரின்ட் அவுட் எடுத்த பிறகு தான் எங்களுக்கு PAN கார்டும் காணாமல் போனது தெரியவந்தது . என் தந்தை இந்த முறை சென்னைக்குப்போகாமலிருப்பதற்காகவே இப்படியெல்லாம் நடக்கிறதோ என்னவோ .இதெல்லாம் போதாதென்று என் தம்பி பையன் ஸ்ரீஷா (வயது 1.5)2 நாட்களுக்கு முன் தன் தாயின் இடுப்பிலிருந்து குதித்துக் கீழே விழு ந்துவிட்டான் .எனவே என் தந்தை சென்னைக்குப் பதில் பெங்களூருக்குப் பயணமானார்


