டிக்கெட் காணாமல் போனதால் என் தந்தை 20,27,29 (ஆமாம் இன்றுதான்) ரயிலை விடவேண்டிய சூழ் நிலை .யாரோ ஒரு புண்ணியவான்/புண்ணியவதி ரயில் டிக்கெட்டை சென்னை , கிண்டியிலிருந்து இன்று போஸ்ட் செய்திருந்தார்கள்.அவருக்கு என் உளமார்ந்த நன்றி .அந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு முதலில் நான் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் சென்றேன் .அவர்கள் நாட்கள் பல கடந்துவிட்டதால் என்னைத் திருச்சிக்குப் போகச் சொன்னார்கள் . நானும் கிடைத்தவரைக்கும் லாபம் எனத் திருச்சி ரயில் நிலையம் சென்றேன் .அங்கே ஒரு மேடம் டிக்கெட்டுகளைப் பார்த்துவிட்டு Claims Departmentக்குப் போகச் சொன்னார்கள் .அங்கே போன பின்னர்தான், இன்று சனிக்கிழமை ,அதனால் விடுமுறை எனத் தெரிந்தது .உடனே என் நண்பர் ரயில்வே ஸ்ரீதருக்கு போன் செய்தேன் .அவர் என்னை உடனே Railway station first Platformல் இருக்கும் Chief ticketing Inspectorஇடம் Journey not performed என்னும் formஐ வாங்கிக்கொள்ளச் சொன்னார் .அவர் சொன்னபடியே செய்தேன் .இந்த formஐ ஒரு கவரிங் லெட்டருடன் Claims Departmentல் திங்கட்கிழமை கொண்டுபோய் கொடுக்கவேண்டும்.தக்க சமயத்தில் என் நண்பர் ஸ்ரீதர் கொடுத்த ஆலோசனையால் பாதி வேலை இன்றே முடிந்தது .
தொடரும் ……………………………


