நேற்று நான் என் உறவினர் ஒருவர் வீட்டிற்குத் துக்கம் கேட்பதற்காக கோயிலூர் சென்றிருந்தேன் .அது ஒரு சிறிய க்ராமமாதலால் அங்கே செல்வதற்குக் குறிப்பிட்ட நேரத்தில் போனால்தான் பேருந்தைப் பிடிக்க முடியும் . நான் ஒரத்தனாட்டில் இறங்கும் போது காலை மணி 11.பேருந்து நிலையத்தில் ஒரு கடைக்காரரிடம் கோயிலூர் போக பஸ் எப்போது வருமெனக் கேட்டதற்கு அவர் மதியம் 3 மணிக்குத்தான் பஸ் வரும் என ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார். நம்பளால 3 மணி வரைக்கும் காத்திருக்க முடியாது என்றெண்ணி , பேசாமல் ஒரு ஆட்டோவில் 50 ரூபாய் கொடுத்துக் கோயிலூர் போய்விடலாம் என்றெண்ணி ஏதாவது ஆட்டோ தென்படுகிறதா எனச் சுற்றும் முற்றும் பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மார்க்கத்தில் இருக்கும் ஒரு சுமாரான பெரிய ஊரான ஒரத்த நாட்டில் ஒரு ஆட்டோ கூட இல்லை என்ற விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது .பிறகு விசாரித்த பின் அங்குள்ள டேக்சி உரிமையாளர்கள் தங்களுக்குச் சவாரி போய்விடும் என்ற பயத்தில் அங்கே எந்த ஆட்டோவையும் ஒட அனுமதிப்பதில்லை என்ற உண்மை தெரிய வந்தது. பாவம் ஒரத்த நாட்டு மக்கள்.


