எங்கள் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறுவனத்திற்கு தினமும் பல பேர் பல புஸ்தகங்களைக் குறித்து போன் செய்வார்கள் .அதில் சிலர் ” ஸ்வாமி இருக்கிறார்களா” என்று கேட்பர் . “ஸ்வாமி” என்று அவர்கள் குறிப்பிடுவது என் தந்தை க்ருஷ்ணமாசாரி அவர்களை நாங்களும் அவர்கள் ஏதோ ஸம்ப்ரதாய விஷயத்தைப் பற்றி ஸ்வாமியிடம் நேரடியாக பேச விரும்புகிறார்கள் போலிருக்கிறது என் போனை ஸ்வாமியிடம் கொடுத்தால் அவர்கள் சொல்வார்கள் , ” எனக்கு ஸ்ரீஸ்தவம் வேணும் அல்லது நாலாயிர திவ்யப்ரபந்தம் புஸ்தகம் வேண்டும் ,அதன் விலை என்ன , அதை சென்னைக்குக் கொரியரில் அனுப்ப எவ்வளவு செலவாகும் . சில சமயம் அவர் ஊரில் இல்லாத போது, ” அவர் ஊரில் இல்லையே, உங்க்களுக்கு என்ன வேண்டும் என நாங்கள் கேட்ட பிறகு அவர்கள் சொல்வார்கள் , ” எனக்கு ஸ்ரீஸ்தவம் வேணும் அல்லது நாலாயிர திவ்யப்ரபந்தம் புஸ்தகம் வேண்டும் ,அதன் விலை என்ன , அதை சென்னைக்குக் கொரியரில் அனுப்ப எவ்வளவு செலவாகும் .இதை எங்களிடமே நேரடியாகக் கேட்டிருக்கலாம் ,இது போன்ற என்கொயரிகளுக்கு பதில் சொல்வதற்காகவே ஒரு staffஐ நாங்களே வேலைக்கு வைத்திருக்கிறோம் யில். இதற்கு அ ந்த staffஏ பதில் சொல்லியிருப்பார் , இதற்கு ஸ்வாமிதான் பதில் சொல்ல வேண்டும என்ற அவசியமில்லை இப்படியாகத் தங்களது தேவையைப் பற்றி நேரடியாக போனில் சொல்ல மாட்டார்கள்.அதை விட்டு விட்டு வேறு எதை எதையோ பற்றி பல நிமிடங்கள் பேசி விட்டுப் பிறகு தான் தேவையான விஷயத்திற்கே வருவர். இன்னும் சில பேர் சில தேவையில்லாத தகவல்களை தாங்களாகவே முன் வ ந்து தருவார்கள் .எங்க அத்தையோட தங்கை யாத்துக்காரரோட ஷட்டகர் தான் அங்க அடிக்கடி வந்து புக் வாங்குவார் அல்லது உங்காத்துக்கு நாலாம் தள்ளிதான் என் மச்சினியோட நாத்தனாரோட மாமியார் குடியிருந்தா , நான் சொல்றது 25 வருஷத்துக்கு முன்னாடி , இப்ப அவாள்ளாம் கனடாவில் செட்டிலாயிட்டா ,இந்த ரீதியில் தங்களைப் பற்றிய சில செய்திகளை அப்போதைய அவர்களுடைய தேவையான புஸ்தகம் வாங்குவதற்குத் துளியும் சம்பந்தமில்லாமல் சிலர் பேசுவார்கள் .இப்படிச் சில பேருக்கு பிறருடைய நேரத்தின் அருமையே தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் தான் இங்கே எழுதியுள்ளேன் .இவர்களைப் போன்றவர்களால் பல போன் கம்பெனிகளுக்கு நல்ல லாபம் .


